X

வீடு தேடி வரும் அரசு சேவை – கெஜ்ரிவால் அரசின் புதிய திட்டம்

அரசு சான்றிதழ் பெறவேண்டி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பலமணி நேரம் வீணாவதுடன், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டி இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சான்றிதழ் சேவைகள் இனி பஞ்சாப்வாசிகளின் வீடு தேடிவர உள்ளது. லூதியானா நகரில் நாளை அறிமுகமாகும் இத்திட்டத்தை பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இதன்படி, ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ் அனைத்து வகையான அரசு சான்றிதழ்கள், மின்சாரக் கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டுவரி உள்பட 43 வகையான அரசு சேவைகள் செய்துதரப்படும். இத்திட்டத்தில் அரசு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பிறகு அவர்களுடன் பேசி நேரம் குறித்த பின் பொதுமக்கள் வீட்டிற்கு அரசு சார்பில் அலுவலர் வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: tamil news