Tamilசினிமா

விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை படத்தில் நடிக்கும் அமீர்கான்

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் செஸ் மேட் கோவிட் என்ற  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாடினார். அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய ஆமிர் கான், விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்.

ஏற்கனவே, விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கை படமாக்கும் பணியில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இறங்கி உள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது நடிகர் ஆமிர் கான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதால், அவரையே இதில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.