Tamilசெய்திகள்

விஷ்வேஷ தீர்த்தர் வாழ்க்கை வரலாறு

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் பல்வேறு சமூக சேவைகளையும் செய்துள்ளார்.

அவருடைய வாழ்க்கை, வரலாறு பற்றிய தகவல்கள் பின்வருமாறு:-

பெஜாவர் மடத்தின் மடாதிபதியான சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் கடந்த 1931-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ராமகுஞ்சாஹள்ளி கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை நாராயணா ஆச்சார்யா ஆவார். தாய் கமலம்மா. இவர்களின் 2-வது மகன்தான் சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் ஆவார். இவருடைய இயற்பெயர் வெங்கடராமா ஆகும்.

இவர் சிறுவயதிலேயே சமஸ்கிருத பள்ளியில் சேர்ந்து படித்தார். மேலும் சமஸ்கிருதத்தில் போஜனைகளும் செய்து வந்தார். இவர் தனது 7-வது வயதிலேயே, அதாவது 1938-ம் ஆண்டே துறவறம் மேற்கொண்டார். மேலும் அப்போதே காயத்திரி மந்திரித்தை தங்கு தடையின்றி சொல்லுவாராம்.

பிரசித்திபெற்ற பெஜாவர் 32-வது மடாதிபதியான இவர் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவர் அடிக்கடி தலித் காலனிகளுக்கு சென்று மக்களை சந்தித்து சேவை செய்வாராம். மேலும் இவர் விஸ்வ இந்து பரிஷத்துடன் சேர்ந்து அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் பசுவதையை தடுக்கவும் கடும் பாடுபட்டு வந்தார்.

அஷ்ட மடங்களுக்கும்(எட்டு மடங்கள்) முதன்மையான மடமான பெஜாவர் மடத்தின் மடாதிபதியான இவர் 5 முறை பர்யாயா பூஜை செய்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். அதாவது அஷ்ட மடங்கள் என்பது 8 மடங்கள் ஆகும்.

இந்த 8 மடங்களையும் மடாதிபதி மத்வாச்சார்யா உருவாக்கி உள்ளார். அந்த 8 மடங்களுக்கு முதன்மையானது தான் பெஜாவர் மடம். வைணவ மடங்களான இந்த 8 மடங்களின் மடாதிபதிகளுக்கும் சுழற்சி முறையில் 2 வருடங்களுக்கு முறை நடத்தப்படும் கிருஷ்ணர் பூஜை நடத்த வாய்ப்பு அளிக்கப்படும். அதன்படி மடாதிபதி சுவாமி விஷ்வேஷ தீர்த்தருக்கு அந்த வாய்ப்பு சுழற்சி முறையில் 14 வருடங்களுக்கு கிடைத்துள்ளது.

அவ்வாறாக இவர் 5 முறை பர்யாயா பூஜை செய்துள்ளார். இதற்கு முன்பு சோதே மடத்தின் மடாதிபதி வாடிராஜா சுவாமி மட்டுமே 5 முறை பர்யாயா பூஜையை செய்திருந்தார்.

பெஜாவர் படத்தின் மடாதிபதியாக சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் கடந்த 1954-ம் ஆண்டுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளார். அவர் தனது முதல் பர்யாயாவை 1954-ம் ஆண்டு, 2-வது பர்யாயாவை 1968-ம் ஆண்டும், 3-வது பர்யாயாவை 1984-ம் ஆண்டும் செய்து முடித்துள்ளார். 4-வது பர்யாயாவை 2000-ம் ஆண்டு நடத்தினார். கடைசியாக அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி தனது 5-வது பர்யாயா பூஜையை நடத்தினார்.

இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களையும், தொண்டு நிறுவனங்களையும் கட்டி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக இவர் அகில பாரத மத்வா மகா மண்டலம் எனும் தொண்டு நிறுவனத்தை அமைத்து நடத்தி வந்தார். மேலும் இவர் ஆன்மிக தலங்களில் பெஜாவர் மடம் சார்பில் கிளைகள் அமைத்தார். அந்த கிளைகள் மூலம் ஏராளமான ஆன்மிகவாதிகள் பயனடைந்து வருகிறார்கள்.

குறிப்பாக பெங்களூருவில் பூர்ணபிரஜ்ன வித்யபீடா எனும் மடத்தை இவர் தொடங்கினார். அந்த மடம் தற்போது 63 வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அந்த மடத்தின் மூலம் ஏராளமான மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக முதல்-முறையாக பொறுப்பேற்றபோது அவரை அழைத்து விஸ்வேசுவர தீர்த்த சுவாமி வாழ்த்து தெரிவித்தார்.

இவர் தனக்கு பிறகு பெஜாவர் மடத்தை தன்னுடைய சீடர் விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமி நிர்வகிப்பார் என்று கூறி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அவருடைய கடைசி ஆசைப்படியே விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமி விரைவில் பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *