Tamilசினிமா

விஷாலை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்!

முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, `வத்திக்குச்சி’ திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு நடித்துள்ள படம் `தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது,

அரசுக்கும் டிக்கெட் புக்கிங்கிற்கும் சம்பந்தமில்லை, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் பொறுப்பற்று நடப்பதால் தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. பிறவியில் இந்த நிலைமைகள் மாறும். அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். அப்படி கேட்கக்கூடிய தலைமை நம்மிடம் இல்லை.

யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த நிலைமை இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் மாறும், எதையும் முயற்சி செய்யாத அமைப்பு, எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு தலைவர். என் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது எனக்கு தான் தெரியும். தயாரிப்பையே தொழிலாக கொண்டுள்ள ஒருவர் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்க வேண்டும். படம் தயாரிக்கும் அனைவரும் தயாரிப்பாளர் இல்லை. தன்னை நடிக்க வைத்து தானே தயாரிப்பவர்கள், தயாரிப்பாளர்கள் என்று முழுமையாக சொல்லிக் கொள்ள கூடாது. அப்படி ஒருவர் இருப்பது தான் இங்குள்ள பிரச்சனைக்கு எல்லாம் காரணம். தமிழ் ராக்கர்ஸை 6 மாதங்களில் ஒழிப்பேன் என்று சொன்னவர்களை எல்லாம் காணோம்.

இந்த நிலைமைக்கு முறையான முயற்சி செய்யாமல் இருப்பதுதான் காரணம். தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *