விஷாலை ரொம்ப மிஸ் செய்கிறேன் – இயக்குநர் மிஷ்கின் வருத்தம்

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், “விஷாலை நான் பொறுக்கி என சொன்னதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். விஷாலும் நான் துரோகத்தை மறக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி நான் என்ன துரோகம் செய்தேன் எனத் தெரியவில்லை. விஷால் என் இதயத்துக்கு நெருக்கமானவர். அவருக்கும் எனக்கும் சண்டை நடந்தது.

நான் அவரை மிஸ் செய்கிறேன். அவர் என்னை மிஸ் செய்ய மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு ஈகோ அதிகம். எனக்கும் ஈகோ இருக்கிறது ஆனால் மேனெஜ் செய்துகொள்வேன். பொறுக்கி என்பது நான் கோபத்தில் சொன்ன வார்த்தை. ஆனால் விஷால் அப்படியில்லை. அவர் ஸ்வீட் பாய். விஷாலுடன் இனி படம் பண்ணவே மாட்டேன். கெஞ்சிக் கொண்டிருக்கமாட்டேன். அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவம்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema