விஷாலை பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது – பாரதிராஜா

நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா பேசும்போது, ”தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாற வேண்டுமென்றால் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும். அதேபோன்று தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தை தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் வர்த்தக சபை என மாற்றியே தீருவேன். நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒரு புல்லுருவியாக விஷால் இருக்கிறார். அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஐசரி கணேஷ் தனது சொந்த செலவில் இருந்து 26 தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools