X

விஷாலுக்கு ஜோடியான சுனைனா

‘எனிமி’ படத்திற்கு பிறகு குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷாலின் 31வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். படத்திற்கு வீரமே வாகை சூடும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் போஸ்டரில் விஷால் சிலரை அடித்து துவம்சம் செய்து மிரட்டல் பார்வையுடன் காணப்படுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் துவங்கியது. ஒரே கட்டமாக குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்கப்பட்டு, தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வினோத் இயக்க இருக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.