Tamilசினிமா

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட டீசரை வெளியிடும் நடிகர் விஜய்

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டீசரை நடிகர் விஜய் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விஷால் சமூக வலைத்தளத்தில் தளபதிவிஜய்ஃபார்மார்கஆண்டனி (ThalapathiVijayForMarkAntony) என்ற ஹாஷ்டாக்கை மட்டும் பதிவிட்டிருப்பதால் இந்த டீசரை விஜய் வெளியாட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.