விஷாலின் ‘மதகஜராஜா’ வெளியீட்டு பணிகள் தொடங்கியது
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 பட்டித் தொட்டி எங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலை எட்டிய முதல் திரைப்படம் இதுவே.
சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு மதகஜராஜா எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அண்மையில் இப்படத்தை குறித்து சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. மத கஜ ராஜா திரைப்படம் அண்மையில் மிகவும் நெருக்கமான வட்டாரத்திற்கு மட்டும் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்திற்கான வரவேற்பு மிகவும் நன்றாக இருந்தது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்ச்சாகத்தில் உள்ளனர்.