விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது
ஆக்ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது ‘சக்ரா’ திரைப்படம் உருவாகி வருகிறது. எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர். பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படதை மே 1ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.