X

விஷாலின் ‘அயோக்யா’ ஏப்ரல் 19 ஆம் தேதி ரிலீஸ்

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷாலுடன் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், தற்போது இப்படத்தை ஏப்ரம் 19ம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இப்படத்தை வெளியிடும் உரிமையை ஸ்கிரின் சீன் நிறுவனம் பெற்றுள்ளது.

அயோக்யா திரைப்படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்காகும்.