Tamilசெய்திகள்

விவேகானந்தர் நினைவிடம் ஆன்மீக சின்னமாக விளங்குகிறது – ஜனாதிபதி திரவுபதி முர்மு கருத்து

கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்த்தார். அதன்பிறகு அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டது குறித்து அவர் தனது கருத்தை எழுதி இருந்தார்.
அந்த புத்தகத்தில் அவர் எழுதி இருந்ததாவது:-

விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குச் சென்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். ஆன்மீகத்தின் சின்னமாக விளங்கும் இந்த வளாகத்தைக் கட்டுவதற்குப் பின்னால் இருந்த மறைந்த ஏக்நாத் ரானடே ஜியின் மகத்துவத்தைக் கண்டு வியக்கிறேன்.

சுவாமி விவேகானந்தரின் மகத்தான பணியை இந்த இடத்தில் உணர்ந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன். விவேகானந்தா கேந்திரத்தின் செயல்பாடுகள் மூலம் சுவாமிஜியின் செய்தியைப் பரப்பும் மக்களின் பக்தியைப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் தனது கருத்தை பார்வையாளர் புத்தகத்தில் எழுதி இருந்தார்.