திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட விவசாயிகள் 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் போடப்பட்ட அருள் என்பவரை தவிர, மீதமுள்ள 6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், வெளியாட்களின் தூண்டுதலின்பேரில் இத்தகைய தவறை செய்துவிட்டோம் என்றும் கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட விவசாயிகளான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்யராஜ் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.