Tamilசெய்திகள்

விவசாயிகளின் போராட்டத்தால் நாட்டின் ஆணவம் தலை குனிந்தது – ராகுல் காந்தி

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், “விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டத்தால், நாட்டின் ஆணவம் தலை குனிந்தது. அநீதிக்கு எதிரான இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்…” என்று பதிவிட்டுள்ளார்.