விளைநிலங்களில் பணிகளை மேற்கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சுமார் 35 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கியுள்ளது.

நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் சமன்படுத்தும் இடத்திற்குள் நுழையாத வண்ணம், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் சுமார் 400 போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news