X

விளம்பரங்களை விட படத்தின் கதை தான் முக்கியம் – அருண் விஜய்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’.  இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம்  விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் ‘போர் தொழில்’ படத்தை பாராட்டி நடிகர் அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘போர் தொழில்’ காட்சிகள் அதிகமாகியுள்ளது. எல்லாம் இடங்களிலும் ஹவுஸ்ஃபுல், வார விடுமுறை படத்திற்கு கூடுதல் பலம். பிரம்மாண்ட விளம்பரங்களை  காட்டிலும் படத்தின் கதை தான் மிகவும் முக்கியமானது என்று தெளிவாக காட்டுகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Tags: tamil cinema