X

வில்லியாக நடிக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் கடந்த வருடம் 4 படங்கள் வந்தன. இந்த வருடம் பிப்ரவரியில் ஜானு என்ற ஒரு தெலுங்கு படம் மட்டுமே வெளியானது. கொரோனாவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் மனோஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்து வெளியான தி பேமிலி மேன் வெப் தொடரின் இண்டாவது சீசனில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

இதில் தனது நடிப்பு குறித்து சமந்தா கூறும்போது, “என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறுமாதிரி இருக்கும். பல விதிமுறைகளை உடைத்து இருக்கிறேன்” என்றார். இந்த தொடரில் அவர் வில்லி வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறார்.