Tamilசினிமா

விரைவில் ‘தனி ஒருவன் 2’ அப்டேட் – இயக்குநர் மோகன் ராஜா

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.

இதுவரை ஜெயம்ரவியின் படங்களில் தனி ஒருவனுக்கென தனி இடம் என்றும் உண்டு. ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகளாகிறது.

இதற்கு பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்கள். அதில் நடிகர் ஹரிஷ் உத்தமன், ‘தனி ஒருவன்’ தனது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் ‘தனி ஒருவன் 2’ குறித்த அப்டேட் கேட்டு மோகன்ராஜாவை டேக் செய்திருந்தார்.

ஹரிஷ் உத்தமனின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இயக்குநர் மோகன்ராஜா, “தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட் விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.