விரைவில் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் – அண்ணாமலை அறிவிப்பு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எங்களுடைய முதல் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். விரைவில் இரண்டாவது பட்டியல் வெளிவரும்.
* எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது.
* 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? ராகுல் காந்தி சொல்வாரா?
இவ்வாறு அவர் கூறினார்.