விரைவாக 3000 ரன்கள் எடுத்து புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா
இங்கிலாந்துக்கு எதிராக கேன்டர்பரியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து புதிய சாதனை படைத்தார்.
இதன்படி, இந்த இலக்கை விரைவாக எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் 76 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 88 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை மந்தனா முறியடித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன், இந்திய அளவில் 3-வது நபர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அவருக்கு முன் ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து மந்தனா 76 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளார்.