Tamilசெய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து – 14 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையம் மற்றும் கிச்சநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துகளில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியும், வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சிவகாசியில் ரெங்கபாளையம் பட்டாசு கடையில் நேற்று நடந்த விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் சுந்தர மூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம்குமார் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.