உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் நேற்று மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனை படைத்த விராட்கோலி, முகமது சமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டியில் விராட்கோலி 50-வது சதத்தை மட்டும் அடிக்கவில்லை. சிறந்த வீரருக்கான வலிமை மற்றும் விடா முயற்சியை எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கும் புதிய மைல்கல்லாக இந்த சாதனை அமைந்துள்ளது. நான் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அவர் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சமிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பல தலைமுறை ரசிகர்களாலும் அவரது பந்து வீச்சானது கொண்டாடப்படும். அற்புதமான பேட்டிங் பந்து வீச்சுகளில் நமது அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.