இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், இன்னாளில் மிகவும் பிரபலமான வர்ணனையாளராக இருக்கும் மைக்கேல் வாகன், இந்திய கேப்டன் விராட் கோலி பற்றி புகழாரம் சூட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
வாகன், ‘விராட் கோலி மிகச்சிறந்த கேரக்டர். ஒரு டெஸ்ட் போட்டியில் எப்படி யுக்தி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை அவர் 4வது போட்டி வெற்றியின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
விராட் கோலி களத்தில் சரியாக நடந்து கொள்வதில்லை என்று புகார் கூறுபவர்கள் உற்சாகத்தை வெறுப்பவர்களாக இருப்பார்கள். விராட் கோலி போன்றவர்கள் கிரிக்கெட்டுக்கு மிக மிக அவசியம். அவரைப் போன்ற ஆட்களால் தான் இந்த விளையாட்டை மேலும் மேலும் ஆர்வமுடையதாக மாற்ற முடியும்.
80 மற்றும் 90களில் ஆஸ்திரேலியாவின் ஷேர் வார்ன் அப்படிப்பட்ட ஒரு கேரக்டராக இருந்தார். இப்போது கோலி இருக்கிறார்’ என்று உச்சபட்ச புகழாரத்தை சூட்டியுள்ளார்.