விராட் கோலி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் – டபிள்யூ.வி.ராமன்

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணியும், இங்கிலந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. நாளை நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.

முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ஐந்து இன்னிங்சில் பேட்டிங் செய்து ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இந்திய அணி முன்னிலை பெறும் அளவிற்கு மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ. வி. ராமன் கூறியதாவது:-

விராட் கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், அவருடைய பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம். விராட் கோலி மீது நிறைய அழுத்தம் உள்ளது. அதனாலேயே அனைவரின் கவனம் அவர் மேல் விழுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் சிறந்த வீரர் என்பதனாலேயே ரசிகர்களின் எதிர்பாப்புகளும் அதிகமாகவே உள்ளது.

3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் விராட் கோலி மீண்டும் தனது பழைய ஃபார்முடன் விளையாடினார். கண்டிப்பாக அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாகவே விளையாடுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டபிள்யூ.வி. ராமன் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools