விராட் கோலி தான் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் – மைக்கேல் கிளார்க் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 39 சதங்களுடன் 10,385 ரன்கள் குவித்துள்ளார். 59-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

219 போட்டிகளில் 39 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலிதான் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் “என்னை பொறுத்தவரையில் ஒருநாள் போட்டியில் எப்போதுமே விராட் கோலிதான் சிறந்த வீரர். இந்தியாவிற்காக அவர் செய்துள்ள சாதனைகளை பார்த்த பிறகு எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்திய அணியின் வெற்றிக்காக அவர் காட்டிய பேரார்வத்திற்கு நாம் மதிப்பு அளிக்க வேண்டும். அவர் ஆக்ரோஷமான வீரர்தான். ஆனால் அவருடைய அர்ப்பணிப்பு, சாதனைகள் குறித்து கேள்வி எழுப்ப இயலாது. விராட் கோலி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools