இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடரை தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ரபாடாவுக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று ரபாடா தெரிவித்துள்ளார்.
ரபாடா இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒயிட் பந்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை விராட் கோலி நிரூபித்துள்ளார். அவர் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார். அவரை எதிர்த்து விளையாடுவது உங்களை ஒரு வீரராக பரிசோதித்துக் கொள்ள அருமையான வாய்ப்பு.
அவர் போராடக் கூடியவர். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கனுக்கு எதிராக பந்து வீசுவது கொஞ்சம் ஜாலி, கடின உழைப்பு, வேடிக்கை’’ என்றார்.