விராட் கோலி தன்னம்பிக்கையை இழந்து விட்டார் – முகமது கைஃப் கருத்து

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டானார்.

ஒடியன் ஸ்மித் பந்தை ஆட முயன்ற போது கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.

இந்த போட்டியில், அவரது கால் சரியான நேரத்தில் முன்னோக்கி வரவில்லை என்பதை நாங்கள் கண்டோம். கோலி தனது உச்சக் கட்டத்தில் இருந்த போது இது போன்ற பந்தை அவர் எல்லைக்கு அடித்திருப்பார் என்றும்,  ஒயிட்-பால் கிரிக்கெட்டில் பின் தங்கியிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கவர் டிரைவ் ஆட்டத்தில் சிறந்த வீரர்களில் கோலியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த நேரத்தில் அவரது தன்னம்பிக்கை குறைவாக இருப்பது போல் தெரிகிறது என்றும் முகமது கைஃப்  தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools