Tamilவிளையாட்டு

விராட் கோலி, டி வில்லியர்ஸை அவுட் ஆக்கியது என் வாழ்க்கையின் சிறந்த தருனம் – ஷ்ரேயாஸ் கோபால்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லெக்-ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபால் சிறப்பாக பந்து வீசி விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரை சாய்த்தார். மேலும் ஹெட்மையர் விக்கெட் வீழ்த்தி, 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

இந்நிலையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் விக்கெட்டுக்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம் என ஷ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷ்ரேயாஸ் கோபால் கூறுகையில் ‘‘ஒரே போட்டியில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக இருக்கும். இவர்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணமாக இருக்கும். அதேபோல் ஐபிஎல் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இருக்கும்.

ஒவ்வொரு விக்கெட்டும் மிகப்பெரியதுதான். ஆனால் இவர்களை போன்ற மிகப்பெரிய வீரர்களை வீழ்த்துவது இன்னும் சிறந்தது’’ என்றார்.

ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கோபால் ஆர்சிபி-க்கு எதிராக 3 போட்டிகளில் 12 ஓவர்கள் வீசி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *