விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் – ஷேன் வார்னே

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பால் டேம்பரிங் விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி மீது அந்நாட்டு ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது விராட் கோலி – டிம் பெய்ன் இடையே கடும் வார்த்தைப்போர் நடைபெற்றது. இது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி பெற்றது. இப்படியே இந்த தொடர் முழுவதும் தொடர்ந்தால் ரசிகர்களை சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள் என்று வீரர்கள் நினைக்கிறார்கள்.

மெல்போர்னில் நாளை தொடங்கும் 3-வது போட்டியிலும் ஸ்லெட்ஜிங்கை காணலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான். ஏனென்றால் விராட் கோலி என ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில், “இந்த வருடம் இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானது. ஏனென்றால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. விராட் கோலி இருப்பதால் இந்த தொடர் சிறப்பானது. விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்.

நாம் விரும்பும் நகரில் ஒன்று மெல்போர்ன். உலகின் விளையாட்டின் தலைநகரம் மெல்போர்ன். மெல்போர்ன் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பாக்சிங் டே டெஸ்டிற்காக இங்கு வரும்போது முதல் நாள் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நாளாக இருக்கும்.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools