விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாத அணியாக விளங்கும் விராட் கோலி தலைமையிலான இந்தியா, தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்றுள்ளது.
இதனால் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி அல்டிமேட் கேப்டன் என பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘விராட் கோலி அல்டிமேட் கேப்டன். அவருடைய பெர்பார்மன்ஸ் அடிப்படையில் தலைமைக்கு உதாரணமாக விளங்குகிறார். விளையாட்டின் அனைத்து அம்சங்கள் மற்றும் விளையாட்டிற்கு வெளியில் உள்ளதையும் வைத்துதான் நான் இவ்வாறு கூறுகிறேன். அடித்தளம் அமைத்துக் கொடுத்த எம்எஸ் டோனியின் பின்புலத்தில் இருந்து சிறப்பாக வந்துள்ளார். மேலும், மாறுபட்ட வழியில் யோசிக்கிறார்.