ஐ.பி.எல் 2022 தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 23
ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 216/4 ரன்கள் குவித்தது. 217 என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு
தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளசிஸ் 8 (9) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.இறுதியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில்
தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் நேற்று விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த டோனி வகுத்த திட்டம் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளைங்களில் வைரலாகி வருகிறது.
2-வது இன்னிங்சின் 4-வது ஓவரை இளம் வீரர் முகேஷ் சவுத்ரி வீச வந்த நிலையில் அதை விராட் கோலி எதிர்கொண்டார். அதற்கு முன்பாக முன்பாக டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் எந்த பீல்டரும்
இல்லாததை பார்த்த எம்எஸ் டோனி அந்த இடத்தில் அவர் பிளிக் ஷாட் அடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை கணித்து ஷிவம் துபேவை அங்கே நிறுத்தினார்.
அடுத்த பந்திலேயே சொல்லி வைத்தார் போல் பிளிக் ஷாட் ஆடிய விராட் கோலி தோனியின் பிளானில் சிக்கி சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தற்போது டோனியை புகழ்ந்து வருகின்றனர்.