விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டியது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வீராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) முத்திரை பதிக்கும் வகையில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் போட்டி, விளம்பரங்கள், சமூக வலைதள பதிவு ஆகியவற்றின் மூலம் அவர் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். உலகில் அதிக வருவாய் ஈட்டும் கிரிக்கெட் வீரராக அவர் திகழ்கிறார்.

இந்நிலையில் வீராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக ‘ஸ்டாக் குரோ’ நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் வீராட் கோலி ‘ஏ’ பிளஸ் பிரிவில் உள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூ.7 கோடி வருமானம் கிடைக்கிறது.

ஒரு டெஸ்டுக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும் 20 ஓவர் ஆட்டத்துக்கு ரூ.3 லட்சமும் பெறுகிறார். 20 ஓவர் கிரிக்கெட் லீக் மூலம் ஆண்டுக்கு ரூ.15 கோடி கிடைக்கிறது. விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். மேலும் பல நிறுவனங்களில் முதலீடும் செய்து உள்ளார். சமூக வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports