இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என சர்வதேச அரங்கில் 70 சதங்கள் அடித்துள்ளார். இதில் ஒருநாள் போட்டியில் மட்டும் 43 சதங்கள் விளாசியுள்ளார்.
அவருக்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை. 9 இன்னிங்சில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
விராட் கோலி 2008-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த வருடம் 5 இன்னிங்சில் விளையாடி சதம் அடிக்கவில்லை. அதன்பின் 2019 வரை அவர் சதம் அடிக்காமல் இருந்ததில்லை.
2009-ம் ஆண்டு முதல் சதத்தை பதிவு செய்தார். 8 இன்னிங்சில் ஒருசதம் கிடைத்தது. அதன்பின் 2010-ல் 3, 2011-ல் 4, 2012-ல் 5, 2013-ல் 4, 2014-ல் 4, 2015-ல் 2, 2016-ல் 3, 2017-ல் 6, 2018-ல் 6, 2019-ல் 5 சதங்கள் அடித்துள்ளார். அதன்பின் தற்போது சதம் அடிக்கவில்லை.