X

விராட் கோலிக்கு காயம்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவை நாளை மறுதினம் (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கேப்டன் விராட் கோலி சவுதம்டனில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தாக்கி வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

அணியின் உடல்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹட் வலியை குறைக்க அவரது விரலில் ‘ஸ்பிரே’ அடித்தார். பிறகு விரலை சுற்றி ‘டேப்’ ஒட்டப்பட்டது. காயம் பயப்படும் வகையில் இல்லை என்றும், அவர் நன்றாக இருப்பதாகவும் அணியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், காயத்தால் விராட் கோலி விளையாட முடியாமல் போய்விடுமோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags: sports news