X

விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர் ப்ராட்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ராட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற மாட்டார் என்ற தகவல், உண்மையாக இருக்கக் கூடாது. உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர். அவர் அணியில் கண்டிப்பாக இடம்பிடிப்பார்.
இவ்வாறு ப்ராட் கூறினார்.