வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
மற்ற இந்திய ஜோடிகளான மவுரியன் கத்வரன்-குஷான் பாலாஷ்ரி மற்றும் பொக்கா நவனித்-பிரியா கொன்ஜெங்பாம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.