Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு – அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் – நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.