Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி – கிர்ஜியோஸை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மோதினர்.

இதில் முதல் செட்டை கிர்கியோஸ் 6-4 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து, விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார்.