X

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டி – ஜோகோவிச், ஜானிக் இன்று மோதுகிறார்கள்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.

23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.

இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)-மெட்வடேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வோன்ட் ரோசோவா (செக்குடியரசு)-ஜாபியர் (துனிசியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

Tags: tamil sports