விமல் படத்தின் டிரைலரை வெளியிட்ட அருண் விஜய்

கடந்த 2010-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அரசியல் கலந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools