விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மக்கள் மீது மோதிய சொகுசு கார் – 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இஸ்கான் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இன்று காலை லாரி-ஜீப் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விசாரணை நடத்துவதற்கான சென்றுள்ளனர். அதவேளையில் விபத்து நடந்த இடத்தை அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்துள்ளனர். இதனால் விபத்து நடந்த பகுதியில் பலர் கூடியிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வந்த ஜாகுவார் சொகுசு கார் கூடியிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. ஜாகுவார் கார் 160 மீட்டர் வேககத்தில் வந்ததால், பலர் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விசாரணை நடத்த வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இதில் அடங்குவார். இந்த விபத்தில் ஜக்குவார் டிரைவர் காயத்துடன் உயிர்தப்பினார். ஒரு விபத்தை பார்க்க சென்று 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.