விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.

ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை ‘ஒரு படி முன்னேற்றம்’ என்ற வாசகத்துடன் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். கம்பூன்றி நடப்பது போல் உள்ள அந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools