Tamilசினிமா

விபசார மோசடி வழக்கில் கன்னட நடிகர் கைது

பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து பெங்களூரு சுத்தகுண்டே பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மோசடியில் ஈடுபட்ட மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஷ், மோகன், மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
கைதானவர்களில் மஞ்சுநாத் என்ற சஞ்சு சில கன்னட படங்களில் நடித்து இருப்பதும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இளம்பெண்களின் புகைப்படங்களை விபசார செயலியில் பதிவு செய்துள்ளனர். அதை உண்மை என்று அணுகி தொடர்பு கொள்பவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். விபசார மோசடி வழக்கில் நடிகர் கைதானது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.