Tamilசெய்திகள்

விந்தனு தானம் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையான டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ பாவெல் துரோவ்

பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் Pavel Durov] அதன் தலைமை அதிகாரியாகவும் [சிஇஓ] உள்ளார். ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் பாவெல் துரோவ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் 12 வெவ்வேறு நாடுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

15 வருடங்கள் முன்பு தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்த நிலையில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது விந்தணுவை முதல் முறையாக தானம் செய்த பாவெல் துரோவ் அன்றுதொட்டு தொடர்ந்து தனது விந்தணுக்களை தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

‘முதல்முறையாக விந்தணுக்களை தயக்கத்துடனேயே தானம் செய்தேன். ஆனால் அப்போது மருத்துவர்கள் என்னிடம் தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் விந்தணு தானம் செய்வது சமூக கடமையாகும் என்று தெரிவித்தனர். அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் எனக்கு தூண்டுதலாக இருந்தது’ என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

‘இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன். இன்னும் வருங்காலங்களில் IVF கிளினிக்கில் உறையவைக்கபட்டு பாதுகாப்பட்டுள்ள எனது விந்தணுக்கள் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும்’ என்றும் பாவெல் பெருமையுடன் கூறுகிறார். மேலும் இதுபோன்று பலரும் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.