X

விதி மீறிய பும்ரா மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.

இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

Tags: tamil sports