X

விதார்த் நடிக்கும் மர்டர் மிஸ்டரில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

பிரபல இயக்குனர்களான பி.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சகோ கணேசன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ட்ரெண்டிங் எண்டர்டெயிண்மெண்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோ சார்பில் கே.சசிகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையமைக்கிறார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags: tamil cinema