X

விட்டுக்கொடுத்த ஜடேஜா – பாராட்டிய அஸ்வின்

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது.

முதல் இன்னிங்சில் 175 ரன்கள் விளாசிய ஜடேஜா, 5 விக்கெட்டுகளும் சாய்த்தார். 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெடும் வீழ்த்தினார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆறு விக்கெட்டுடன் 436 விக்கெட்டுகள் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கபில்தேவ் 434 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் இருந்தார்.

மொகாலி டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா, ஜயந்த் யாதவ் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருந்தனர். பொதுவாக 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடம் பிடிக்கும்போது அவருக்கு போதுமான அளவு தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு கிடைக்காது.

மொகாலி டெஸ்டின்போது கேப்டன் ரோகித் சர்மா ஜயந்த் யாதவுக்கு கூடுதலாக ஓவர் வழங்க வேண்டும் என விரும்பினார். இதுகுறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். அப்போது ஜடேஜா முதலில் தன்னுடைய ஓவரை எடுத்துக் கொள்ளட்டும். தனக்குப் பதிலாக ஒரு முனையில் இருந்து தொடர்ந்து பந்து வீசட்டும் எனத் தெரிவித்தார்.

அதன்பின் தான் விட்டுக்கொடுத்தேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார். முதலில் பந்து வீச விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் பெருந்தன்மையை அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார்.