‘கருடன்’ திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.
இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் தேசிங்கு ராஜா, ஜீவா,வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தும் வெற்றி பெற்றார்.மேலும் ‘விடுதலை’ படத்தில் ஹிட் ஆனது. கடும் உடற்பயிற்சி செய்து ‘சிக்ஸ் பேக்’ உடலில் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது.இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறியதாவது :-
விடுதலை- 2 படத்தில் என்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தற்போது நான் நடிக்கும் ‘கருடன்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
‘விடுதலை- 2’ படத்திற்கு முன்னதாக ‘கருடன்’ படம் ரிலீஸ் ஆகி விடும். விடுதலை- 2 படம் போலவே ‘கருடன்’ படமும் ஒரு நல்ல படமாகும். இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது. தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை யாரும் அழைக்க வில்லை.படம் நடிப்பில் நான் ‘பிஸி’ ஆக இருக்கிறேன்”.என தெரிவித்தார்.