விஜய் முறையாக வருமான வரி கட்டுகிறார் – வருமான வரித்துறை அறிவிப்பு

பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 5-ந் தேதி நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.

3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாகவும் பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools