X

விஜய் மகன் ஹீரோவாக நடித்தால் தேவயானி மகள் தான் ஹீரோயினாம்! – சொன்னது யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் ‘தொட்டால் சிணுங்கி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி, காதல் கோட்டை உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

‘நீ வருவாய் என’ படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ராஜகுமாரன். அந்த படத்தில் நடிகர்கள் அஜித், பார்த்திபன், நடிகை தேவயானி ஆகியோர் நடித்தனர். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அப்போது நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்து அந்த காதலும் வெற்றி பெற்றது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு தேவயானி நடிக்கவில்லை. கணவர் ராஜகுமாரனுடன் கிராமத்தில் குடியேறி விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். இந்த தம்பதிக்கு பிரியங்கா ராஜகுமாரன், இனியா ராஜகுமாரன் ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

ராஜகுமாரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ‘நீ வருவாய் என’ படத்தின் 2-ம் பாகத் தில் நடிகர் விஜய் மகன் சஞ்சயையும், தேவயானி மகள் பிரியங்காவும் ஜோடியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

இது பற்றி தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

திரை உலகில் நான் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. 15 வருடங்கள் போராடி தான் சினிமா துறையில் வெற்றி பெற்றேன்.

1999-ல் சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான “நீ வருவாய் என” படத்தை முதல் முதலாக இயக்கினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு 2-ம் பாகத்தை உருவாக்கும்படி பலரும் கூறி வந்தார்கள். இப்போது அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.

இந்த படததில் நடிகர் விஜய் மகன் சஞ்சயை நடிக்க வைக்க திட்டம் உள்ளது. எனது மகள்களுக்கும் சினிமா ஆசை உள்ளது. எனவே சஞ்சய் ஜோடியாக எனது மகளை நடிக்க வைக்கவும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: tamil cinema